ADDED : செப் 30, 2024 06:05 AM

கடலுார்: கடலுார் ஸ்ரீமந் மணவாள மாமுனிகள் கைங்கர்ய சபா சார்பில் 26ம் ஆண்டு வைஷ்ணவ மாநாடு திருப்பாதிரிபுலியூரில் நடந்தது.
மாநாடு திருக்கோவலுார் ஜீயர் சுவாமிகள் கருடக்கொடி ஏற்றி வைத்து, துவங்கியது. கடலுார் லட்சுமண ராமானுஜ சுவாமிகள் தலைமை தாங்கி, பேசினார். கைங்கர்ய சபா தலைவர் ஸ்ரீதர் ராமானுஜம் வரவேற்றார். பொருளாளர் வெங்கடேசன் மாநாடு அறிக்கை வாசித்தார். மாநாட்டில் வைணவ கோவில்களை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து திருவல்லிக்கேணி கோமடம் மாதவாச்சார்யார் சுவாமிகள் 'பக்தியின் பெருமை', திருச்சித்ரகூடம் ஸ்ரீமதி கச்சிகிடாம்பி ஹரிப்பிரியா தேவநாதன், 'ஆழியான் நேமியான்' தலைப்பில் கருத்துரை வழங்கினர்.
திருக்கோவலுார் ஜீயர் சுவாமிகள் அருளாசி வழங்குகிறார்.
ஸ்ரீவில்லிபுத்துார் திருமலை விஞ்சிமூர் வம்சியராய் 33வது பட்டம் ஸ்ரீநிவாச வெங்கடாச்சார்யார் சுவாமிகள், 'எம்பெருமானின் கருணை' தலைப்பில் சொற்பொழிவு, உ.வே வில்லுார் நடாதுார் கருணாகராச்சார்ய சுவாமிகள் உபன்யாசம் நடந்தது.
கூட்டத்தில் திருப்பாதிரிபுலியூர் வரதராஜபெருமாள் கோவிலில் நடந்து விடுப்பட்ட வடைமாலை நிகழ்ச்சியை மீண்டும் நடத்த வேண்டும்.
கடலுாரில் மீண்டும் தீர்த்தவாரி உற்சவம் நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

