/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பல்கலை விண்ணப்பங்கள் விற்பனை துவக்கம்
/
பல்கலை விண்ணப்பங்கள் விற்பனை துவக்கம்
ADDED : ஜன 25, 2026 03:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலை தொலைதுார மற்றும் இணையவழி கல்வி மையத்தில், 2025-26 கல்வி ஆண்டிற்கான, தொலைதுார கல்வி பாடப்பிரிவுகளுக்கான விண்ணப்பங்கள் விற்பனை துவக்க விழா நடந்தது.
பல்கலை துணைவேந்தர் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் அறிவுடைநம்பி, பதிவாளர் சிங்காரவேல் ஆகியோர் துவக்கி வைத்தனர். தொலைதுார கல்வி இயக்குனர் அருள்செல்வி, துணை இயக்குனர் சீனிவாசன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
மாணவர்கள் சேர்க்கை தொடர்பான அனைத்து விபரங்களையும் www.audde.in என்ற இணையதள முகவரியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

