/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மத்திய அமைச்சர் 'சென்டிமென்ட்' வி.சி.,யுடன் மோத பா.ம.க., முடிவு
/
மத்திய அமைச்சர் 'சென்டிமென்ட்' வி.சி.,யுடன் மோத பா.ம.க., முடிவு
மத்திய அமைச்சர் 'சென்டிமென்ட்' வி.சி.,யுடன் மோத பா.ம.க., முடிவு
மத்திய அமைச்சர் 'சென்டிமென்ட்' வி.சி.,யுடன் மோத பா.ம.க., முடிவு
ADDED : மார் 13, 2024 06:52 AM
சிதம்பரம் : சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனை எதிர்த்து வேட்பாளரை நிறுத்துவதற்கு பா.ம.க., திட்டமிட்டுள்ளது.
சிதம்பரம் தொகுதியின் சிட்டிங் எம்.பி.,யான, வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன், 'சிதம்பரம் தொகுதி என் தாய் மடி, மீண்டும் அங்குதான் போட்டியிடுவேன்' என அறிவித்துள்ளார். தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவுக்கு வந்த நிலையில், சிதம்பரத்தில் வி.சி., கட்சியினர் தேர்தல் பணிகளை துவக்கி விட்டனர்.
இந்நிலையில், இந்த தொகுதியை 3 முறை தன் வசம் வைத்திருந்த பா.ம.க.,வும் சிதம்பரம் மீது தனது பார்வையை திருப்பி உள்ளது. இதற்கு முக்கியமான காரணமும் உள்ளது. அது, 'மத்திய அமைச்சர்' சென்டிமென்ட் தான்.
கடந்த 1998ம் ஆண்டு முதல் முறையாக தலித் எழில்மலை பா.ம.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய அமைச்சராக இருந்தார். பின், 1999, 2014 ஆகிய ஆண்டுகளில் பா.ம.க., சார்பில் பொன்னுசாமி வெற்றி பெற்றார். அவரும் மத்திய அமைச்சராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சிதம்பரத்தை ராசியான தொகுதியாக பா.ம.க., கருதுவதால், இந்த முறை சிதம்பரம் தொகுதியில் மீண்டும் களம் இறங்க முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக, தனது கட்சியினரிடம் பா.ம.க., தலைமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
பா.ம.க.,வும், வி.சி.,யும் நேருக்கு நேராக மோதுவதற்கு ஆயத்தமாகி வருவதால் சிதம்பரம் தேர்தல் களத்தில் இப்போதே அனல் பறக்க துவங்கி விட்டது.

