/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீட்டின் பூட்டை உடைத்து 2 சவரன் திருட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து 2 சவரன் திருட்டு
ADDED : நவ 17, 2025 01:59 AM
ராமநத்தம்: வீட்டின் பூட்டை உடைத்து 2 சவரன் செயின் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநத்தம் அடுத்த மா.புடையூரைச் சேர்ந்தவர் சக்திவேல், 50; இவர், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டு கதவின் பூட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் அருகிலுள்ள உறவினர் வீட்டில் துாங்கி கொண்டிருந்தார்.
நள்ளிரவில் வந்த மர்மநபர்கள் சிலர், அவரது வீட்டு கதவின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த, 2 சவரன் செயின் மற்றும் ரூ.15 ஆயிரத்தை திருடி சென்றனர்.
நேற்று காலை அவர் வீட்டிற்கு வந்த போது, கதவின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

