ADDED : பிப் 05, 2024 04:02 AM

நெல்லிக்குப்பம், : திருவண்ணாமலையில் இருந்து கஞ்சா கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி கலால் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையில் போலீசார் பண்ருட்டி பகுதியில் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். பஸ் நிலையத்தில் சந்தேகபடும்படி நின்றிருந்த இருவரிடம் விசாரனை செய்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த தில், கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரிந்தது.
அவர்கள், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த முருகன் மகன் சுபாஷ் சந்திரபோஸ், 20; சிவக்குமார் மகன் ஸ்ரீதர், 22; என்பதும், திருவண்ணாமலையில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரிந்தது. தஞ்சாவூர் பஸ்சுக்காக காத்திருந்துள்ளனர்.
பண்ருட்டி கலால் போலீசார் வழக்கு பதிந்து ஸ்ரீதர், சுபாஷ் சந்திரபோஸ் இருவரையும் கைது செய்து, 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

