/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மண்புழு உரம் தயாரிக்க பயிற்சி முகாம்
/
மண்புழு உரம் தயாரிக்க பயிற்சி முகாம்
ADDED : நவ 15, 2025 05:32 AM
வேப்பூர்: நல்லுார் ஒன்றிய வேளாண் துறை சார்பில் அட்மா திட்டத்தில் மண்புழு உரம் தயாரிக்கும் பயிற்சி முகாம் ஐவதுகுடியில் நடந்தது.
முகாமிற்கு, நல்லுார் ஒன்றிய வேளாண் உதவி இயக்குனர் கீதா தலைமை தாங்கினார். விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் சுகுமார் முன்னிலை வகித்தார்.
வேளாண் மத்திய திட்ட மாவட்ட துணை இயக்குனர் அமிர்தராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.
நல்லுார் ஒன்றிய வேளாண் தொழில்நுட்ப மேலாளர் சவுந்தரராஜன், அலுவலர்கள் விக்னேஷ், சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், மண்புழு உரம் தயாரிக்கும் முறைகள், பயன்கள், தொழில்நுட்ப செயல்பாடுகள், அரசு திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

