/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இந்துமக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
/
இந்துமக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 27, 2024 10:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி- பண்ருட்டியில், இந்து மக்கள் கட்சி சார்பில் வடலுாரில் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்திராகாந்தி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் தேவா தலைமை தாங்கினார். தொகுதி தலைவர் லட்சுமணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வீராசாமி, சிவநாகராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் ஜம்புலிங்கம், ஆன்மிக பேரவை மாநிலத் தலைவர் சக்திவேல் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், வடலுாரில் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷம் எழுப்பினர்.
ஒன்றி செயலாளர் வீரமுத்து நன்றி கூறினார்.

