/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஏலம் போனது ரூ. 7.5 லட்சம் பட்டுவாடாவோ ரூ. 40 லட்சம்
/
ஏலம் போனது ரூ. 7.5 லட்சம் பட்டுவாடாவோ ரூ. 40 லட்சம்
ஏலம் போனது ரூ. 7.5 லட்சம் பட்டுவாடாவோ ரூ. 40 லட்சம்
ஏலம் போனது ரூ. 7.5 லட்சம் பட்டுவாடாவோ ரூ. 40 லட்சம்
ADDED : டிச 24, 2025 06:11 AM
க டலுார் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஹரி ஏரி உள்ளது. அந்த ஏரியில் 800 ஏக்கர் பரப்பில் கருவேல காடு உள்ளது.
செழிப்பாக வளர்ந்துள்ள இந்த கருவேல மரங்களை ஏலம் விட பொதுப்பணித்துறை முடிவு செய்தது.
சில கோடி மதிப்புள்ள இந்த மரங்களை, ஏலம் எடுக்க ஆளும் கட்சி மற்றும் பிற கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவியது.
இந்நிலையில் அருகாமை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ஆளும் கட்சி பிரமுகர் களத்தில் இறங்கினார்.
உள்ளூர் ஆளும் கட்சி, பிற கட்சி பிரமுகர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கு தாராளமாக ரூ. 4௦ லட்சத்தை வாரி வழங்கினார். இதனால் நேற்றைய ஏலம் அதே கிராமத்தில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகத்தில் சுமூகமாக நடந்தது.
இந்த ஏலத்தில் 7.5 லட்சம் ரூபாய்க்கு உள்ளூர் பிரமுகர் பெயரிலே ஏலம் எடுக்கப்பட்டது. இதற்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.,யாக ரூ. 1.35 லட்சமும் செலுத்தினார்.
இதை பார்த்த உள்ளூர் பிரமுகர் ஒருவர், ரூ,. 7.5 லட்சம் மதிப்பு ஏலத்திற்கு ரூ. 4௦ லட்சம் பட்டுவாடாவா என வாயை பிளந்து அங்காலாய்த்து கொண்டார்.

