/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாநகராட்சிக்கு சொத்துவரி செலுத்தாத மகளிர் கல்லுாரி அலுவலகத்திற்கு 'சீல்' கடலுாரில் திடீர் பரபரப்பு

ADDED : மார் 13, 2024 06:56 AM

கடலுார் : கடலுாரில், 15 ஆண்டாக சொத்து வரி செலுத்தாத மகளிர் கல்லுாரி அலுவலகத்தை மாநகராட்சி அதிகாரிகள் 'சீல்' வைத்ததால் பரபரப்பு நிலவியது.
கடலுார் செம்மண்டலத்தில் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லுாரி இயங்கி வருகிறது. இக்கல்லுாரி கடந்த 15 ஆண்டாக கடலுார் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி ரூ.36.93 லட்சத்தை செலுத்தாமல் உள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி சார்பில் பலமுறை நோட்டீஸ் வழங்கியும், கல்லுாரி நிர்வாகம் வரியை செலுத்தவில்லை.
அதையடுத்து, மாநகராட்சி கமிஷனர் காந்திராஜ் உத்தரவின் பேரில், வருவாய் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான குழுவினர் நேற்று கல்லுாரிக்கு சென்று, அங்கு அலுவலகத்தில் இருந்து ஊழியர்களை வெளியேற்றிவிட்டு, கதவை மூடி 'சீல்' வைத்தனர்.
சென்னையில் உள்ள கல்லுாரி தலைமை அலுவலகத்தில் இருந்து கமிஷ்னர் காந்திராஜை போனில் தொடர்பு கொண்டு வரி பாக்கியை கட்டிவிடுவதாக உறுதியளித்தனர். அதனையேற்று, கல்லுாரி அலுவலகத்திற்கு வைத்த 'சீலை' மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி கதவை திறந்துவிட்டனர்.
இச்சம்பவத்தால் கல்லுாரி வளாகத்தில் பரபரப்பு நிலவியது.