நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி திட்டக்குடி ஞானகுரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு தின விழா நடந்தது.
விழாவிற்கு, பள்ளி நிறுவனர் கோடிதலைமை தாங்கினார். தாளாளர் சிவகிருபா முன்னிலை வகித்தார். முதல்வர் அய்யாதுரைவரவேற்றார். சிறப்பு விருந்தினர் முன்னாள் சர்வதேச தடகள வீரர் நல்லுசாமி அண்ணாவி பேசினார்.
விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றமாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை பள்ளி நிர்வாக அலுவலர் சித்ரா, ஒருங்கிணைப்பாளர் கீர்த்திகா,உடற்கல்வி ஆசிரியை பிரியா செய்திருந்தனர். ஆசிரியை அகல்யா நன்றி கூறினார்.