/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இருளர் மீனவர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி
/
இருளர் மீனவர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி
ADDED : பிப் 09, 2024 06:37 AM

பரங்கிப்பேட்டை: இருளர் மீனவர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி முகாம் நடந்தது.
பரங்கிப்பேட்டை அடுத்த சின்னுார் சண்முகா நகர் பகுதியில், மத்திய அரசின் கீழ் இயங்கும் கடல் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் சார்பில், இருளர் பழங்குடி மீனவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் 2 நாட்கள் நடந்தது.
கடல் பொருள் ஏற்றுமதி கழக தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் அருள் மூர்த்தி தலைமை தாங்கினார். மீன் வளத்துறை ஆய்வாளர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். பயிற்சியின் போது, கடல் மீன்களை பாதுகாக்கும் முறை, மீன்களை சேதப்படுத்தாமல் பாதுகாப்பாக கையாளும் முறை, மீன்களை தரம் பிரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
முகாமில், மீன்வளத்துறை மேற்பார்வையாளர்கள் ராஜேஷ், சாகர் மித்ரா கலந்து கொண்டனர்.

