/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாசிமக பிரம்மோற்சவத்தில் சிம்பிளாக முடிந்த நிகழ்ச்சிகள்; அதிகாரிகள் மீது பக்தர்கள் அதிருப்தி

ADDED : பிப் 27, 2024 11:51 PM
விருத்தாசலத்தில் புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில், மாசிமக பிரம்மோற்சவம் விமர்சையாக நடந்து முடிந்தது. 11 நாட்கள் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பாக நடந்த திருவிழாவில், ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.
அறநிலையத்துறையின் கீழ் பராமரிக்கப்படும் கோவில் என்பதால், ஆண்டுதோறும் விசேஷமாக நடப்பது வழக்கம்.
இதற்காக, உற்சவ உபயதாரர்கள் மூலம் தமிழகத்தின் பிரபலமான பட்டிமன்ற பேச்சாளர்களை வைத்து, நிகழ்ச்சிகள் நடத்தப்படும். மாலை 6:00 மணிக்கு மேல் துவங்கும் கலை நிகழ்ச்சிகள், நள்ளிரவு வரை தொடரும். சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டு வந்து, ஆன்மிக நிகழ்ச்சிகளை கண்டு ரசித்து செல்வர்.
ஆனால், இந்தாண்டு பிரபலமான நபர்கள் வருகை ஏதும் இல்லாமல், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். நிரந்தர உண்டியல், திருவிழா சிறப்பு உண்டியல் என பக்தர்களின் காணிக்கையை கொண்டு நிகழ்ச்சிகளை வெகு விமர்சையாக நடத்தி இருக்கலாம்.
திருவிழாவில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பிரபலங்கள் வருகை இல்லாமல் அறநிலையத் துறையினர் எளிமையாக முடித்து விட்டனர். இதனால் விருத்தாசலம் பக்தர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.