/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரேஷன் கடைகளில் கோதுமை பற்றாக்குறை
/
ரேஷன் கடைகளில் கோதுமை பற்றாக்குறை
ADDED : மார் 06, 2024 03:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சில மாதங்களாக கோதுமை மற்றும் மண்ணெண்ணெய் குறைந்த அளவில் ரேஷன் கடைகளுக்கு வழங்கப்பட்டு வருவதால் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் கோதுமை, மண்ணெண்ணெய் வழங்கப்பட முடியாத சூழ்நிலை உள்ளது.
இதனால் பொதுமக்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. பொது மக்களின் நலன் கருதி அனைத்து பொருட்களும் போதியளவு ரேஷன் கடைகளில் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

