/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கட்டுக்கட்டாக வாக்காளர் அட்டைகள் குப்பை வண்டியில் இருந்ததால் 'ஷாக்'

ADDED : ஜூலை 31, 2025 04:02 AM

கடலுார்: கடலுார் மஞ்சக்குப்பத்தில் குப்பை வண்டியில் கட்டுக்கட்டாய் கிடந்த வாக்காளர் அடையாள அட்டையை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், கடலுார், மஞ்சக்குப்பம் புல்லுக்கடை சந்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. அங்கு குப்பை வண்டிகள், பழுதடைந்த வாகனங்கள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.
இங்கு, நேற்று காலை குப்பை வண்டியை எடுப்பதற்காக துப்புரவு தொழிலாளர்கள் வந்தனர்.
அப்போது, அந்த வண்டியில் கட்டுக்கட்டாக வாக்காளர் அடையாள அட்டைகள் கிடந்தன. மேலும் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மை, 'சீல்' போன்றவையும் கிடந்தன.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கடலுார் தாசில்தாருக்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில் தாசில்தார் மகேஷ் சம்பவ இடத்திற்கு வந்து குப்பை வண்டியில் கிடந்த வாக்காளர் அடையாள அட்டைகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினார். விசாரணையில், வாக்காளர் அடையாள அட்டை கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தது எனத் தெரிந்தது. அதிகாரிகள் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.