/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கட்டணம் வசூலிப்பு புகார் பள்ளிக்கு எச்சரிக்கை
/
கட்டணம் வசூலிப்பு புகார் பள்ளிக்கு எச்சரிக்கை
ADDED : மே 04, 2025 04:53 AM
காட்டுமன்னார்கோவில் : அரசு உதவி பெறும் பள்ளியில் கட்டாய டியூஷன் கட்டணம் வசூலிக்கக் கூடாது என, அமைதி பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்பட்டது.
காட்டுமன்னார்கோவில் பருவதராஜகுருகுலம் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் 10, பிளஸ் ௧ மற்றும் பிளஸ் ௨ வகுப்பு மாணவர்களுக்கு கட்டயா டியூஷன் எடுப்பதாகவும், அதற்கு 10 ஆயிரம் வரை கட்டணம் வசூலிப்பதாகவும் புகார் எழுந்தது.
இது தொடர்பாக காட்டு மன்னார்கோவில் தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. தாசில்தார் பிரகாஷ் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் முன்னிலை வகித்தார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானசேகர், பள்ளி துணை செயலாளர் ராஜாராம், தலைமை ஆசிரியர் மதிவாணன், புகார்தாரர் தரப்பில், வெற்றிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவர்கள் நலன் கருதி சிறப்பு வகுப்புகள் நடத்தலாம். ஆனால், கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலிக்கக் கூடாது.
இதனை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளி நிர்வாகத்திற்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

