/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆசிரியை தற்கொலை வழக்கில் பள்ளி உரிமையாளர் மகன் கைது
/
ஆசிரியை தற்கொலை வழக்கில் பள்ளி உரிமையாளர் மகன் கைது
ஆசிரியை தற்கொலை வழக்கில் பள்ளி உரிமையாளர் மகன் கைது
ஆசிரியை தற்கொலை வழக்கில் பள்ளி உரிமையாளர் மகன் கைது
ADDED : அக் 25, 2025 02:14 AM

விருத்தாசலம்: ஆசிரியை தற்கொலைக்கு காரணமான தனியார் பள்ளி உரிமையாளர் மகனை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம், புதுவிளாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராதிகா, 35. இவர், மங்கலம்பேட்டை அடுத்த வீராரெட்டிகுப்பம் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி., ஆசிரியராக, 10 ஆண்டுகளாக பணிபுரிந்தார்.
இவரும், பள்ளி உரிமையாளர் ஜேசுதாஸ் ராஜா மகன் பிரின்ஸ் நவீன், 37, என்பவரும் காதலித்துள்ளனர். இந்நிலையில், அதே பள்ளியில் சமையலராக பணிபுரிந்து வரும் எடைக்கல் கிராமத்தைச் சேர்ந்த ஆர்த்தி என்பவரையும் நவீன் காதலித்துள்ளார்.
இதையறிந்த ராதிகா, அக்., 18ல் நவீனுடன் 'வாட்ஸாப்' வீடியோ காலில் சண்டையிட்டபடி, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மங்கலம்பேட்டை போலீசார் விசாரித்து வந்தனர். ராதிகா தற்கொலைக்கு பிரின்ஸ் நவீன் காரணம் என, உறுதி செய்யப்பட்டதையடுத்து, பிரின்ஸ் நவீனை போலீசார் கைது செய்தனர்.

