ADDED : ஜூலை 23, 2025 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டுமன்னார்கோவில்: கொள்ளிடம் ஆற்றில் டிராக்டரில் மணல் திருடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த வீரசோழபுரம் கொள்ளிடம் ஆற்றங்கரையோரத்தில் டிராக்டரில் மணல் திருட்டு நடப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம், சப் இன்ஸ்பெக்டர் வாசுதேவன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது, டிப்பருடன் கூடிய டிராக்டரில் மணல் திருடிய மர்ம நபர், போலீசாரை பார்த்ததும் தப்பியோடினார்.
உடன், போலீசார் வழக்குப் பதிந்து டிராக்டரை பறிமுதல் செய்து, தப்பியோடிய ஆழங்காத்தான் பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் விஜயை தேடி வருகின்றனர்.

