/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆர்.எஸ்.எஸ்., பேரணி பொதுக்கூட்டம்: போலீசார் குவிப்பு
/
ஆர்.எஸ்.எஸ்., பேரணி பொதுக்கூட்டம்: போலீசார் குவிப்பு
ஆர்.எஸ்.எஸ்., பேரணி பொதுக்கூட்டம்: போலீசார் குவிப்பு
ஆர்.எஸ்.எஸ்., பேரணி பொதுக்கூட்டம்: போலீசார் குவிப்பு
ADDED : அக் 07, 2024 07:03 AM

சிதம்பரம்: சிதம்பரத்தில் ஆர்.எஸ்.எஸ்., அணி வகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சிதம்பரத்தில், ஆர்.எஸ்.எஸ்., சார்பில், அகல்யாபாய் ஹோல்கரின் 300வது ஆண்டு, அருட்பிரகாச வள்ளலாரின் 200 ஆண்டு நிறைவு மற்றும் சுவாமி சகஜானந்தரின் 133 ஆண்டு நிறைவு விழா, ஆகிய முப்பெரும் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி, நேற்று மாலை ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களின்சீருடை அணிவகுப்பு பேரணி நடந்தது. சிதம்பரம் ரயில் நிலையம் அருகிலிருந்து புறப்பட்ட பேரணியை கோவை, மாதேஷ் மகா சமஸ்தானம் யுத்தேஸ்வர் சுவாமிகள் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின் பேரணி எஸ்.பி.,கோயில்தெரு வழியாக சபாநாயகர் தெரு, வெல்லப்பிறந்தான் தெரு வழியாக சென்று தெற்குரதவீதி, படித்துறை இறக்கம் வழியாகபோல் நாராயணன் தெருவில் முடிந்தது.
பின் நடந்த பொதுக்கூட்டத்திற்கு, தொழிலதிபர் ராமநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் செல்வராஜ் வரவேற்றார். வழக்கறிஞர் தண்டபாணி முன்னிலை வகித்தார்.
இதில் கோவை மாதேஷ் மகா சமஸ்தானம் யுத்தேஸ்வர் சுவாமிகள் பங்கேற்று, 'தற்கால சூழலில் இந்துத்துவா' என்ற புத்தகத்தை வெளியிட்டு பேசினார். தொடர்ந்து சமூதாய நல்லிணக்க பேரவை மாநில நிர்வாகி ஐயப்பன் சிறப்புறையாற்றினார். நகர பொறுப்பாளர் சிவகுரு நன்றி கூறினார்.

