/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ. 25 கோடியில் சிதம்பரத்தில் சாலை பணி அமைச்சர்கள் பன்னீர்செல்வம், மஸ்தான் துவக்கி வைப்பு

ADDED : மார் 14, 2024 05:26 AM

சிதம்பரம், : சிதம்பரம் நகரில் ரூ. 25 கோடி செலவில், வெளிவட்ட சாலை அமைக்கும் பணியை, அமைச்சர்கள் பன்னீர்செல்வம், மஸ்தான் துவக்கி வைத்தனர்.
சிதம்பரம் நகரக்குள் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு ரூ. 25 கோடியில் தில்லையம்மன் ஓடையின் இருபுறமும், வெளிவட்ட சாலை அமைக்கப்படுகிறது. அத்துடன், ரூ. 14.65 கோடியில் கான்சாகிப், வடக்கு ராஜன் வாய்க்காலில் தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது.
இப்பணிகள் துவக்க விழா நேற்று முன்தினம் நடந்தது.
கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன் வரவேற்றார். எம்.எல்.ஏ., சிந்தனைச்செல்வன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன் வாழ்த்துரை வழங்கினர்.
வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் ஆகியோர் திட்டப்பணிகளை துவக்கி வைத்தனர்.
விழாவில் நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், ஏ.எஸ்.பி., ரகுபதி, கவுன்சிலர்கள் வெங்கடேசன், அப்பு சந்திரசேகரன், அசோகன், ஜெயசித்ரா, லதா, வளர்மதி, தாரணி, கவிதா, சுதா மற்றும் நகராட்சி பொறியாளர் மகாராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.