ADDED : மார் 19, 2024 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே தரைக்கிணற்றில் தவறி விழுந்த பசுவை, தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
விருத்தாசலம் அடுத்த மு.அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரது விளைநிலத்தில், முருகனின் பசுமாடு நேற்று மேய்ச்சலுக்கு சென்றது.
அங்கு, எதிர்பாராதவிதமாக தரைக்கிணற்றில் தவறி விழுந்தது.
தகலறிந்து வந்த மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், பசுவை உயிருடன் மீட்டனர்.

