/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நிவாரணம் கேட்டு மறியல்: பாலுாரில் 70 பேர் கைது
/
நிவாரணம் கேட்டு மறியல்: பாலுாரில் 70 பேர் கைது
ADDED : டிச 17, 2024 07:10 AM

நடுவீரப்பட்டு; பண்ருட்டி அடுத்த பாலுாரில், 12 ஊராட்சிகளுக்கு மழை நிவாரணம் வழங்காததை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த அண்ணாகிராமம் ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளில் 30 ஊராட்சிகளுக்கு மட்டும் மழை நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. பாலுார், சன்னியாசிப்பேட்டை, பல்லவராயநத்தம், ஏழுமேடு, அகரம், சித்தரசூர், நரிமேடு, கீழ் அருங்குணம், எய்தனுார், சாத்திப்பட்டு, சுந்தரர்பாடி, நத்தம் ஆகிய ஊராட்சிகளுக்கு மழை நிவாரணம் வழங்கவில்லை.
இதைக் கண்டித்து கடந்த 7ம் தேதி அப்பகுதி மக்கள் சாலை மறியலுக்கு முயன்றனர். பேச்சுவார்த்தை நடத்திய பண்ருட்டி தாசில்தார், இரண்டு தினங்களுக்குள் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்ததை ஏற்று மறியல் கைவிடப்பட்டது.
நிவாரணம் கேட்டு இப்பகுதி ஊராட்சி தலைவர்கள் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.
இந்நிலையில் நிவாரணம் கிடைக்காத ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள், பொதுமக்கள் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் நேற்று காலை 10:00 மணிக்கு பாலுார் பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பண்ருட்டி தாசில்தார் ஆனந்த், நெய்வேலி டி.எஸ்.பி., சபியுல்லா, நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.உடன்பாடு ஏற்படாதால் 11:50 மணிக்கு 55 பெண்கள் உள்ளிட்ட 70 பேர் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். மற்றவர்கள் கலைந்து சென்றனர்.
மறியலால் பாலுார்- பண்ருட்டி சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

