/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாக்கடையில் சிக்கிய தனியார் பள்ளி வேன்
/
சாக்கடையில் சிக்கிய தனியார் பள்ளி வேன்
ADDED : டிச 21, 2025 05:59 AM

புவனகிரி: கீரப்பாளையத்தில் பள்ளி சிறுவர்களை இறக்கி விட்டு, வளைவில் திரும்பிய வேன் சாக்கடையில் சிக்கி, தனியார் வீட்டு சுவரில் மோதி நின்றது.
சிதம்பரத்தில் இருந்து தனியார் பள்ளி வேன் நேற்று மாலை கீரப்பாளையம் மேட்டுத்தெருவில் மாணவர்கள் சிலரை இறக்கி விட்டு, மெயின்ரோட்டிற்கு வந்தது.
அப்போது எதிரில் வந்த பைக்கிற்கு வழிவிட சாலையோரம் டிரைவர் வேனை ஒதுக்கினார். அப்போது கழிவு நீர் சாக்கடையில் வேன் இறங்கி, தனியார் வீட்டு சுவரில் மோதி நின்றது.
இதில் வேனின் முன் பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதனால் மாணவர்கள் கூச்சலிட்டனர். அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று வேனில் இருந்து, 15, சிறுவர்களை பாதுகாப்பாக மீட்டனர்.
தகவலறிந்த பள்ளி நிர்வாகத்திற்கு சொந்தமான காரை கொண்டு வந்து, வேனில் அழைத்து வரப்பட்ட சிறுவர்களை, அவர்களின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
புவனகிரி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். இச்சம்பவத்தால் நேற்று அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

