/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆன்மிக சிந்தனையாளர் விருது வழங்கல்
/
ஆன்மிக சிந்தனையாளர் விருது வழங்கல்
ADDED : செப் 24, 2024 06:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரத்தை சேர்ந்த நெடுஞ்செழியன் என்பவருக்கு, ஆன்மிக சிந்தனையாளர் விருதை, தருமபுர ஆதீனம் வழங்கினார்.
சிதம்பரம் அடுத்த நெய்வாசல் கிராமத்தை சேர்ந்தவர் நெடுஞ்செழியன். இவர், கடந்த 30 ஆண்டுகளாக ஆன்மிக எழுத்தாளராகவும், பல்வேறு ஆன்மிக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இவரது ஆன்மிக பணியை பாராட்டி, ஆன்மிக சரித்திர சிந்தயாளர் என்ற விருது வழங்கப்பட்டது.
சிதம்பரம் அடுத்துள்ள திருநாரையூர் கோவில் கும்பாபிஷேக விழாவின் போது, தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார், நெடுஞ்செழினுக்கு, விருது வழங்கினார்.
விருத்தாசலம் ஜெயின் ஜுவல்லரி உரிமையாளர் அகர்சந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

