/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'கஞ்சா' போதையால் சீரழியும் பாலிடெக்னிக் மாணவர்கள்
/
'கஞ்சா' போதையால் சீரழியும் பாலிடெக்னிக் மாணவர்கள்
ADDED : பிப் 27, 2024 11:52 PM
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டில் முத்தையா பாலிடெக்னிக் கல்லுாரி செயல்பட்டு வருகிறது.
இக்கல்லுாரியில் ஏழை, எளிய, பின்தங்கிய மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர்.
சமீப காலமாக சிதம்பரம் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ள நிலையில், பாலிடெக்னிக் கல்லுாரியில் பயிலும் மாணவர்களும் கஞ்சா போதைக்கு அடிமையாகி சீரழிந்து வருகின்றனர்.
பையில் கஞ்சா, 'ஐடி' கார்டில் கஞ்சா சுருட்டும் பேப்பர் என வைத்துக் கொண்டு திரிகின்றனர்.
கல்லுாரி நிர்வாகம் மாணவர்களின் எதிர்காலம் குறித்து, எவ்வித கவலையின்றி கண்டுகொள்ளாமல் இருக்கின்றது.
போலீசார் மாணவர்களை போதையில் இருந்து மீட்கவும், கல்லுாரி பகுதியில் கஞ்சா விற்பனையைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

