/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சென்டர் மீடியனில் அதிகரிக்கும் அரசியல் கட்சி விளம்பரங்கள்
/
சென்டர் மீடியனில் அதிகரிக்கும் அரசியல் கட்சி விளம்பரங்கள்
சென்டர் மீடியனில் அதிகரிக்கும் அரசியல் கட்சி விளம்பரங்கள்
சென்டர் மீடியனில் அதிகரிக்கும் அரசியல் கட்சி விளம்பரங்கள்
ADDED : டிச 31, 2025 03:09 AM
க டலுார் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன விபத்துக்களை தவிர்க்கும் வகையில் நெடுஞ்சாலை துறை சார்பில் மந்தாரக்குப்பம் பகுதியில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக சென்டர் மீடியன் இரு பகுதிகளிலும் அரசியல் கட்சி போஸ்டர்கள், பிளக்ஸ் பேனர்கள், கட்சி விளம்பரங்கள் எழுதி வருவது அதிகரித்து வருகிறது.
இதனால் சாலையில் வாகனங்கள் செல்லும் போது வாகன ஒட்டிகள் கவன சிதறல் ஏற்பட்டு விபத்துக்களில் சிக்கும் நிலை உள்ளது.
இது குறித்து நெடுஞ்சாலைதுறையினர் சென்டர் மீடியனில் போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தினர்.
இது தொடர்பாக மந்தாரக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.
இனி வரும் காலங்களில் சென்டர் மீடியன்களில் அரசியல் கட்சி விளம்பரங்கள் எழுதுவது, போஸ்டர், பிளக்ஸ் பேனர் ஒட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பபட்டது.
தற்போது மீண்டும் சென்டர் மீடியனில், அரசியல் கட்சியினர் போட்டி போட்டி கொண்டு கருப்பு வெள்ளை பெயிண்டை மறைத்து விட்டு அரசியில் கட்சி விளம்பரங்களை எழுதி வருகின்றனர்.
இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

