ADDED : ஏப் 10, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: டெண்டர் பற்றிய விபரங்களை தெரியபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, நகராட்சி நிர்வாக முதன்மை செயலாளருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி நிர்வாக முதன்மை செயலாளருக்கு, நெல்லிக்குப்பம் நகராட்சியில் பதிவு செய்த ஒப்பந்ததாரர் வீரமோகன் அனுப்பிய மனு:
நெல்லிக்குப்பம் நகராட்சியில் பல கோடிக்கு பணிகள் நடக்கிறது. இதற்காக நடக்கும் டெண்டர் விபரங்களை பதிவு செய்த அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் தெரியபடுத்துவதில்லை. தங்களுக்கு வேண்டிய ஒப்பந்ததாரருக்கு மட்டுமே தகவல் கொடுத்து டெண்டர் வழங்குகின்றனர்.
இதனால் மற்றவர்கள் பணி எடுக்க முடியாத நிலை உள்ளது. எனவே, பதிவு செய்துள்ள அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் டெண்டர் பற்றிய விபரங்களை தெரியபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

