/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முறைகேடாக இலவச பட்டா ரத்து செய்ய மனு
/
முறைகேடாக இலவச பட்டா ரத்து செய்ய மனு
ADDED : மார் 12, 2024 05:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார், : முறைகேடாக வழங்கிய இலவச பட்டாக்களை ரத்து செய்யக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த கருணாகரநல்லுாரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனு;
எங்கள் ஊராட்சி மேலத்தெருவில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் வழங்கப்பட்ட வீட்டுமனை ஒப்படைக்கான இணையவழி பட்டாவில் ஏற்கனவே வீட்டுமனைகள், நிலங்கள் வசதிபடைத்த நபர்களுக்கு முறைகேடாக இலவச பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும். ரியல் எஸ்டேட் தரகர்கள் போல் செயல்படும் அதிகாரிகள், அலுவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

