/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேர்தல் பாதுகாப்புக்கு வந்தது துணை ராணுவம்
/
தேர்தல் பாதுகாப்புக்கு வந்தது துணை ராணுவம்
ADDED : மார் 13, 2024 12:01 AM

லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில், கடலுார் மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள 9 சட்ட மன்றத் தொகுதிகளில் 2302 வாக்குப் பதிவு சாவடிகள் உள்ளன. பதட்டமான வாக்குச்சாவடிகள் 178 உள்ளன.
விருத்தாசலம் தொகுதியில் நடியப்பட்டு, பண்ருட்டி தொகுதியில் சன்னியாசிப்பேட்டை, நரிமேடு, கடலுார் தொகுதியில் அழகியநத்தம், குறிஞ்சிப்பாடி தொகுதியில் குணமங்கலம், திருவந்திபுரம், மணக்குப்பம், எஸ்.புதுார், பெரியகாட்டுசாகை, பெத்தனாங்குப்பம், காட்மன்னார்கோவில் தொகுதியில் கோதண்டவிளாகம், கொண்டசமுத்திரம் ஆகிய வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமான வாக்குச்சாவடியாக கருதப்படுகிறது.
அதையொட்டி, தேர்தல் பாதுகாப்பு பணிக்கு டில்லி விமானநிலையம் சி.எஸ்.எஸ்.எப் துணை ராணுவத்தினர் ஒரு கம்பெனி நெய்வேலிக்கு வருகை தந்துள்ளனர். டி.எஸ்.பி., ரகாவத் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெகதீஷ் டோரா உள்ளிட்ட 90 துணை ராணுவத்தினர் வந்துள்ளனர். இவர்கள் நெய்வேலி என்.எல்.சி., விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பின்னர் அவர்களுக்கு பணிகள் ஒதுக்கப்படும் என அதிகாரி தெரிவித்தார்.

