/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரம்
/
சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரம்
ADDED : ஏப் 12, 2025 02:57 AM
கடலுார்: கடலுார் புதுவண்டிப்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா நடந்தது.
அதனையொட்டி, கடந்த 2ம் தேதி கொடியேற்றம், 7ம் தேதி சிவசுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை திருமணம் நடந்தது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதை தொடர்ந்து, பங்குனி உத்திர விழாவான நேற்று, காலை 6:00 மணிக்கு உத்திரபாத கோபுர தரிசனம், இடும்பன் வாகன வீதி உலா, மதியம் 12:00 மணியளவில் பங்குனி உத்திர 108 சங்கு பூஜை மகா அபிஷேகம், யாக சாலை, கலச பூஜை அபிஷேகம் நடந்தது.
மாலையில் அபிஷேகம் மற்றும் வீதியுலா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காவடி எடுத்து, சுவாமி தரிசனம் செய்தனர்.

