/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேசிய பசு மை ப டை மாணவர்கள் மரக்கன்று நடல்
/
தேசிய பசு மை ப டை மாணவர்கள் மரக்கன்று நடல்
ADDED : மார் 05, 2024 05:49 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், தேசிய பசுமை படை மாணவர்கள் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தாளாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கி, மரம் நடுதல் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் கிருபாளனி, ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், 'மரங்களை காப்போம், சுற்றுப்புற சூழலை துாய்மையாக வைத்து, மாசில்லா காற்றை சுவாசிப்போம்' என மாணவர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
மேலும், பள்ளி வளாகத்தில், தேசிய பசுமை படை மாணவர்கள் சார்பில், 100 மரக்கன்றுகள் நடப்பட்டது.
முடிவில், ஆசிரியை ஷில்பா நன்றி கூறினார்.

