ADDED : செப் 24, 2024 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டுமன்னார்கோவில்:காட்டுமன்னார்கோவிலில், 63 நாயன்மார்களின் ஒருவரான நந்தனார் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.
நந்தனார் பிறந்த காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள மா.ஆதனுாரில் அவரது நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. காட்டுமன்னார்குடி பஸ் நிலையம் அருகில்,மா.கம்யூ., சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, வட்ட செயலாளர் தேன்மொழி தலைமை தாங்கினார். வட்ட குழு உறுப்பினர்கள் பொன்னம்பலம், சிங்காரவேலு, விமலக்கண்ணன், மணிகண்டன் முன்னிலை வகித்தனர்.
மா.கம்யூ., மாநில குழு உறுப்பினர் ரமேஷ்பாபு நினைவேந்தல் உரையாற்றினார். மாவட்ட குழு உறுப்பினர் பிரகாஷ், கிளை செயலாளர்கள் நீலமேகன், மணிகண்டன், ராஜசேகர், வட்டக்குழு உறுப்பினர் தினேஷ்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

