ADDED : ஜன 14, 2025 07:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பத்தில் போகி பண்டிகையில் பழைய பொருட்களை எரித்ததால் நகரமே புகை மூட்டமாக காட்சியளித்தது.
போகியை முன்னிட்டு வீட்டில் இருந்த பழைய பொருட்களை தெருவில் போட்டு நகரம் முழுவதும் அதிகாலை நேரத்தில் எரித்தனர்.
நேற்று அதிகாலை அதிகளவு பனிபொழிவு இருந்ததால் மக்கள் பழைய பொருட்களை எரித்ததால் ஏற்பட்ட புகை செல்ல முடியாமல் நகரமே புகை மூட்டமாக காட்சியளித்ததால் வாகன ஓட்டிகள் சிரமபட்டனர்.
இதுபற்றி ஆன்மிக பெரியவர்கள் கூறியதாவது பொறாமை கோபம் போன்ற தீய பழக்கங்களை போகி அன்று கைவிட்டு நல்ல பழக்கங்களை பின்பற்ற துவங்க வேண்டும் என்பதையே பழையன கழிதலும் புதியன புகுதலும் என கூறினர்.
இதை தவறாக புரிந்து கொண்ட மக்கள் பழைய பொருட்களை எரித்து சுற்று சூழலை பாதிக்க செய்வது தவறு என கூறினர்.

