/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொள்ளிடம் பாலத்தில் போக்குவரத்து துவக்கம் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
/
கொள்ளிடம் பாலத்தில் போக்குவரத்து துவக்கம் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
கொள்ளிடம் பாலத்தில் போக்குவரத்து துவக்கம் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
கொள்ளிடம் பாலத்தில் போக்குவரத்து துவக்கம் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
ADDED : மார் 16, 2024 05:47 AM

சிதம்பரம்: கொள்ளிடம் பாலத்தில் போக்குவரத்து துவங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினம் வரை, 194 கி.மீ., துாரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்க மத்திய அரசு 6 ஆயிரத்து 431 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் பணிகள் துவங்கியது.
விழுப்புரம்- புதுச்சேரி; புதுச்சேரி-கடலுார் பூண்டியாங்குப்பம்; பூண்டியாங்குப்பம்-சட்டநாதபுரம்; சட்டநாதபுரம்-நாகப்பட்டினம் என நான்கு பிரிவுகளாக பணிகள் நடந்து வருகிறது. இதில், இடையில் ரயில்வே மேம்பாலம் மற்றும் ஆற்றுப்பாலங்கள் உள்ளிட்ட பணிகள் நடந்து வந்தது.
அதில், பூண்டியங்குப்பம் - சட்டநாதபுரம் பிரிவில் ஆலப்பாக்கம் ரயில்வே மேம்பாலம் மற்றும் கொள்ளிடம் பாலம் பணியும் முக்கியமானவை. இதில் ஆலப்பாக்கம் ரயில்வே மேம்பால பணி மந்தமாக நடந்து வருகிறது.
சிதம்பரம் அடுத்த கொள்ளிடம் ஆற்றில் 1 கி.மீ., துாரத்திற்கான பாலம் கட்டும் பணி கடந்த 2022ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் துவங்கியது. வெள்ளம் உள்ளிட்ட இடர்பாடுகளை கடந்து, ஆற்றில் 29 பில்லர்கள் அமைத்து பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து கடந்த வாரம் பாலத்தில் இரு சக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்த கடந்த 10ம் தேதி முதல் கார், பஸ் மற்றும் கனரக வாகனங்களின் போக்குவரத்தும் துவங்கியது.
கொள்ளிடம் புதிய பாலம் திறக்கப்பட்டதால், வல்லம்படுகை, கொள்ளிடம், புத்துார், எருக்கூர், அரசூர், கோவில்பத்து ஆகிய ஊர்களுக்குள் செல்லாமல், சிதம்பரத்தில் இருந்து நேராக சீர்காழி அடுத்த மேலசெங்கமேடு வரை பயணிக்க முடியும்.
மேலும் சட்டநாதபுரம், சூரப்பகாடு வரை ஒன்னரை கிலோ மீட்டர் பணிகள், ஓரிரு நாட்களில் முடியும் தருவாயில் உள்ளது. ஆலப்பாக்கம் ரயில்வே மேம்பாலம், பு.முட்லுார், சி.முட்லுாரில் சாலை பணிகள் மட்டுமே பாக்கி உள்ளது. மற்ற பணிகள் முடிவடைந்துள்ளது.

