/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ெஹச்டி லைன்கள் அடிக்கடி 'கட்' 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி
/
ெஹச்டி லைன்கள் அடிக்கடி 'கட்' 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி
ெஹச்டி லைன்கள் அடிக்கடி 'கட்' 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி
ெஹச்டி லைன்கள் அடிக்கடி 'கட்' 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி
ADDED : ஆக 30, 2025 07:03 AM
கடலுார்: கடலுார் அருகே பெரிய கங்கணாங்குப்பம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின் தடையால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடலுாரில் இருந்து பெரிய கங்கணாங்குப்பம், சரஸ்வதி நகர், சின்ன கங்கணாங்குப்பம், பாலாஜி நகர், தியாகு நகர், உச்சிமேடு, நாணமேடு, சுப உப்பலவாடி உட்பட 20க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு மின் சப்ளை வழங்கப்படுகிறது. ெஹச்டி ஒயர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டதால் தற்போது உலுத்துப்போய் உள்ளது.
கடந்த 10 நாட்களில் இரவு நேரங்களில் மின் தடை ஏற்படாத நாளே இல்லை. தினமும் இரவு நேரத்தில் ெஹச்டி ஒயர்கள் அறுந்து விழுவது வாடிக்கையாகி விட்டது.
நள்ளிரவு முழுதும் மின்வாரிய தொழிலாளர்கள் படாதபாடுபட்டு பழுதுபார்த்து மின்சாரத்தை வழங்குகின்றனர். கிராமங்களில் ஒயர்மேன்களும் தற்போது குறைந்து வருகின்றனர்.
இதுபோன்று அடிக்கடி ஏற்படும் மின் தடையால் கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இரவு நேரத்தில் துாக்கத்தை இழக்கும் நிலை ஏற்படுகிறது.
எனவே அதிகாரிகள் மின் தடைக்கான காரணத்தை அறிந்து அவற்றை நிரந்தரமாக நீக்குவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.