/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலத்தில் ரூ. 1 கோடிக்கு வீடு தேர்தலுக்கு தயாராகிறார் எம்.எல்.ஏ.,?
/
விருத்தாசலத்தில் ரூ. 1 கோடிக்கு வீடு தேர்தலுக்கு தயாராகிறார் எம்.எல்.ஏ.,?
விருத்தாசலத்தில் ரூ. 1 கோடிக்கு வீடு தேர்தலுக்கு தயாராகிறார் எம்.எல்.ஏ.,?
விருத்தாசலத்தில் ரூ. 1 கோடிக்கு வீடு தேர்தலுக்கு தயாராகிறார் எம்.எல்.ஏ.,?
ADDED : ஏப் 23, 2025 05:35 AM
மாவட்டத்தில் கடலுார், விருத்தாசலம், சிதம்பரம், பண்ருட்டி உட்பட 9 சட்டசபை தொகுதிகளில், விருத்தாசலம் முக்கியத்துவம் வாய்ந்தது.
இதனை கடலுாரில் இருந்து பிரித்து, விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ., (பா.ம.க.,) கோவிந்தசாமி துவங்கி, 30 ஆண்டுகளாக சட்டசபையில் முழக்கமிட்டும் பயனில்லை.
கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., நேரடியாக களத்தில் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதி கட்டத்தில் கூட்டணி கட்சியான காங்., கைப்பற்றியது.
இது, தி.மு.க.,வினர் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தபோதும், 'வாழ்வா சாவா' என்ற தேர்தல் யுத்தத்தில், காங்., வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வெற்றிக்கு பாடுபட்டு, அவரை எம்.எல்.ஏ.,வாக்கினர்.
நெய்வேலி தொகுதிக்கு உட்பட்ட முத்தாண்டிகுப்பத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., ஆனதால் அவரை உள்ளூர்வாசிகள் அடிக்கடி நேரில் சந்திக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால், வரும் தேர்தலில் உள்ளூரை சேர்ந்த தி.மு.க., வேட்பாளரே போட்டியிட வேண்டும் என தலைமையிடம் வலியுறுத்த அக்கட்சியினர் முடிவெடுத்துள்ளனர்.
இந்நிலையில், யாரும் எதிர்பாராக வகையில், ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., விருத்தாசலம் பெரியார் நகர் தெற்கு பகுதியில், ரூ.1 கோடிக்கு புதிதாக வீடு வாங்கியுள்ளார்.
தன்னை வெளியூர்காரர் என யாரும் கூறாத வகையில், இனி விருத்தாசலத்திலேயே தங்கி, கட்சிப்பணியாற்ற முடிவு செய்துள்ளார்.
வரும் தேர்தலில் மீண்டும் 'சீட்' பெற்று, வெற்றி வாகை சூடுவார் எனவும் காங்., கட்சியினர் பரபரப்பாக பேசி வருகின்றனர்.
தி.மு.க., போட்டியிடும் தொகுதியை தட்டிப்பறித்தது காங்., என புலம்பி வரும் நிலையில், அக்கட்சி எம்.எல்.ஏ., புதிதாக வீடு வாங்கியிருப்பது 2026 தேர்தலுக்கு தயாராகுகிறாரா என்ற கேள்வி தி.மு.க., வினர் மத்தியில் எழுந்துள்ளது.

