ADDED : டிச 20, 2024 11:37 PM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில், கடலுார் மாவட்ட சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், சிறுபான்மையோர் நல உரிமை தினம் கொண்டாடப்பட்டது.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் சங்கர் தலைமை தாங்கினார். துணை சேர்மன் முகம்மது யூனுஸ் வரவேற்றார். மாவட்ட முஸ்லிம் பெண்கள் நல சங்க கவுரவ இணை செயலாளர் கமாலுதின் முன்னிலை வகித்தார்.
விழாவில், சிறுபான்மையினருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சங்கர், மீராப்பள்ளி நிர்வாகி ஷேக் அப்துல் காதர் மரைக்கயார், சேவாமந்திர் பள்ளி ஜான்சி ராணி, முன்னாள் நகர செயலாளர் முனவர் உசேன், ஜாபர், ஹுசைன், பரங்கிப்பேட்டை ஜமாத் நிர்வாகிகள் ஜெயினுல்லாபுதீன், நிஜாமுத்தின், வர்த்தக சங்க செயலாளர் சாலிஹ் மரைக்காயர், சமூக ஆர்வலர் முத்துராஜா, கடலூர் துறைமுகம் ஜமாத் நிர்வாகிகள் ஷாஹுல் ஹமீத், ஹனீப், ஹாமீது உட்பட பங்கேற்றனர். துணை தாசில்தார் பழனி நன்றி கூறினார்.

