/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குரூப் 4 தேர்வுக்கான பயிற்சி வகுப்பு அமைச்சர் கணேசன் துவக்கி வைப்பு

ADDED : பிப் 19, 2024 05:54 AM

திட்டக்குடி: திட்டக்குடி அரசுக்கல்லுாரியில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பை அமைச்சர் கணேசன் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மண்டல இயக்குனர் சந்திரன் வரவேற்றார்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் சுந்தரவல்லி, குரூப் 4 பயிற்சி வகுப்பு குறித்து விளக்கி பேசினார். அமைச்சர் கணேசன், பயிற்சி வகுப்பை துவக்கி வைத்து, கையேடுகளை வழங்கி பேசினார். திட்டக்குடி அரசுக் கல்லுாரி முதல்வர் இந்திராணி வாழ்த்துரையாற்றினார்.
விழாவில் கல்லுாரி மாணவர்கள், பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆறுமுக வெங்கடேஷ் நன்றி கூறினார்.