/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தொழிலாளி மீது தாக்குதல் ஒருவர் கைது: 2 பேருக்கு வலை
/
தொழிலாளி மீது தாக்குதல் ஒருவர் கைது: 2 பேருக்கு வலை
தொழிலாளி மீது தாக்குதல் ஒருவர் கைது: 2 பேருக்கு வலை
தொழிலாளி மீது தாக்குதல் ஒருவர் கைது: 2 பேருக்கு வலை
ADDED : அக் 19, 2024 04:58 AM
பண்ருட்டி : பண்ருட்டி அருகே முன்விரோதம் காரணமாக தொழிலாளியை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி அடுத்த அழகப்பசமுத்திரம் அந்தோணியர் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ்,46; அதே பகுதியை சேர்ந்தவர்கள் நிர்மல்ராஜ். அந்தோணிகுமார், ஜெபஸ்டின் இவர்கள் 4 பேரும் அங்குள்ள ஹாலோ பிளாக் தயாரிக்கும் கூடத்தில் வேலை செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை செய்வதில் மோகன்ராஜிக்கும் மற்ற 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் சம்பவத்தன்று சத்திரம் ரோடு மாந்தோப்பு அருகில் நின்று கொண்டிருந்த மோகன்ராஜை நிர்மல்ராஜ், அந்தோணிகுமார், ஜெபஸ்டின் ஆகியோர் சேர்ந்து தாக்கி,கொலை மிரட்டல் விடுத்தனர்.
புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து ஜெபஸ்டின்,37; கைது செய்தனர். மற்ற இருவரை தேடி வருகின்றனர்.