/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு
/
சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு
சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு
சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : டிச 20, 2025 06:53 AM
கடலுார்: கடலுார் சட்ட உதவி எதிர் பாதுகாப்பு முகமை அலுவலகத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுகுறித்து முதன்மை மாவட்ட நீதிபதி சுபத்திரா தேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு கீழ் இயங்கும் சட்ட உதவி எதிர் பாதுகாப்பு முகமை அலுவலகத்தில் துணை தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகராக பணிபுரிய (மதிப்பூதியம் மாதம் 40,000 ரூபாய்), உதவி சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகராக பணிபுரிய (மதிப்பூதியம் மாதம் 25,000 ரூபாய்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணியிடங்களுக்கு கடலுார் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் பணிபுரியும் துணை தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பணிக்கு குற்றவியல் வழக்குகளில் 7 ஆண்டுகள் வழக்காடிய அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்களும், உதவி சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பணிக்கு குற்றவியல் வழக்குகளில் 3 ஆண்டுகள் வழக்காடிய அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்கள் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தை கடலுார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தின் https://cuddalore.d.courts.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜன. 23ம் தேதி மாலை 5:00 மணிக்குள் தலைவர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, நீதிமன்ற வளாகம், கடலுார் என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம்.
நேர்காணல் பிப். 8ம் தேதி காலை 10:00 மணிக்கு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இயங்கும் மாற்று தீர்வு முறை மைய கட்டடத்தில் நடக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

