/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிருஷ்ணசாமி பள்ளியில் மழலையர் பள்ளி ஆண்டு விழா
/
கிருஷ்ணசாமி பள்ளியில் மழலையர் பள்ளி ஆண்டு விழா
ADDED : பிப் 03, 2024 12:09 AM

கடலுார் -கடலுார் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 34வது பெற்றோர் தின விழா மற்றும் மழலையர் பள்ளி ஆண்டு விழா நடந்தது.
விழாவிற்கு, பள்ளி தாளாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் நடராஜன் முன்னிலை வகித்தார். உயர்நிலைப் பள்ளி ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டினா பிளாரன்ஸ் வரவேற்றார்.
மாநகராட்சி கமிஷனர் காந்திராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். பெற்றோர் சார்பில் சோபன்பாபு, ஜெயபிரதாபன், சங்கீதா ஆகியோர் பேசினர்.
பள்ளியின் முன்னாள் மாணவர்களான சென்னை வழக்கறிஞர் யாழினி, பாஸ்போர்ட் அலுவலர் ரூபன் வாழ்த்துரை வழங்கினர். பள்ளி சார்பில், அரவிந்தர் கண் மருத்துவமனை டாக்டர் நவீனிடம், கண்தான உறுதிமொழி பதிவு படிவங்கள் வழங்கப்பட்டது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த மாணவ, மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ், ரொக்க பரிசு, விருதுகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.
கிருஷ்ணசாமி வித்யாநிகேதன் சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் எலிசபெத்ஜோசப், கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி எக்ஸ்லன்ஸ் முதல்வர் சாந்தி பாண்டியன் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை பள்ளி அலுவலக மேலாளர் முத்துக்குமரன் செய்திருந்தார்.
மழலையர் வளாக ஒருங்கிணைப்பாளர் அணிலா சன்னி ராய் நன்றி கூறினார்.

