/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பலா மதிப்பு கூட்டு மையம் பணிகள் ஜரூர்
/
பலா மதிப்பு கூட்டு மையம் பணிகள் ஜரூர்
ADDED : டிச 18, 2025 06:51 AM

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையத்தில் பலாப்பழம் மதிப்பு கூட்டு மைய கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையத்தில் வேளாண்மைத்துறை சார்பில் ரூ.16 கோடி மதிப்பில் பலாப்பழம் மதிப்பு கூட்டுமைய கட்டுமான பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் துவங்கியது.தற்போது கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
கட்டுமான பணியில் பில்லர் மற்றும் சுவர் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளது.
மேற்புற கட்டுமான பணிகள் முடிந்ததும்,பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த மதிப்பு கூட்டுமையத்தில் பலாப்பழம், மதிப்பு கூட்டப்பட்டு வெளிநாட்டுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.
மேலும் இந்த மையத்தில் பலா பழத்திலிருந்து சுவீட் தயாரித்தல், பவுடர், சிப்ஸ் உள்ளிட்ட பல பொருட்களை தயாரித்து ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

