/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பட்டாசு தயாரிக்கும் ஆலைகளில் ஆய்வு
/
பட்டாசு தயாரிக்கும் ஆலைகளில் ஆய்வு
ADDED : அக் 23, 2024 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி பகுதிகளில், பட்டாசு தயாரிக்கும் ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்
குள்ளஞ்சாவடி அடுத்த கோ.சத்திரம், மேட்டுப்பாளையம், குறிஞ்சிப்பாடி அடுத்த ராஜாக்குப்பம், நெத்தனாங்குப்பம், வடலுார் அடுத்த பார்வதிபுரம், தென்குத்து ஆகிய பகுதிகளில் உள்ள எல்.ஈ-ஒன் வெடிபொருள் கூடங்களை நேற்று அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் மகேஸ்வரன், தாசில்தார் அசோகன், தீயணைப்பு துறை நிலைய அலுவலர் உத்திராபதி உள்ளிட்டோர், பாதுகாப்பான முறையில் பட்டாசு தயாரிக்கப்படுகிறதா, அதில் ஈடுபடும் தொழிலாளர்கள், வெடி பொருட்கள் சட்டம் பின்பற்றப்படுகிறதா என, ஆய்வு செய்தனர்.

