/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வடலூர் நகராட்சி அலுவலகம் திறப்பு விழா; அமைச்சர்கள் நேரு, பன்னீர்செல்வம் பங்கேற்பு

ADDED : மார் 04, 2024 12:38 AM

வடலூர் : வடலுாரில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட நகராட்சி அலுவலகம் திறப்பு விழா நடந்தது.
வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட கல்விக்குழு தலைவர் சிவக்குமார், நகராட்சி கமிஷனர் குணசேகரன் முன்னிலை வகித்தனர். நகராட்சி சேர்மன் சிவக்குமார் வரவேற்றார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் நேரு சிறப்பு விருந்தினராக பங்கேற்று, நகராட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். தி.மு.க., நகர செயலாளர் தமிழ்செல்வன், நகராட்சி துணை சேர்மன் சுப்ராயலு, இன்ஜினியர் சிவசங்கரன், தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், கவுன்சிலர் பழனி, குறிஞ்சிப்பாடி பேரூராட்சி சேர்மன் கோகிலாகுமார், துணை சேர்மன் ராமர், குறிஞ்சிப்பாடி நகர செயலாளர் ஜெய்சங்கர், வடலுார் நகராட்சி மேலாளர் குமார், வருவாய் ஆய்வாளர் சரவணகுமார், கணக்காளர் லுார்துமேரி, துப்புரவு ஆய்வாளர் மோகனபிரியதர்ஷினி, மேற்பார்வையாளர் ஆறுமுகம், இளநிலை உதவியாளர் கணேசமூர்த்தி, உதவியாளர் குளோரி, பணி மேற்பார்வையாளர் முத்தையா, தொழில்நுட்ப உதவியாளர் அருண்சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.