/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கராத்தே மாணவர்களுக்கு டி.எஸ்.பி., வாழ்த்து
/
கராத்தே மாணவர்களுக்கு டி.எஸ்.பி., வாழ்த்து
ADDED : செப் 27, 2024 05:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: கராத்தே பயிற்சியில் பிளாக் பெல்ட் பெற்ற மாணவர்களை டி.எஸ்.பி., கிரியா சக்தி வாழ்த்தினார்.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டையில் உள்ள தமிழன் தற்காப்புக் கலை பயிற்சி பள்ளியில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பலர் பயிற்சி பெறுகின்றனர்.
அதில், பிளாக் பெல்ட் பெற்ற மாணவர்கள் இனியகார்த்தி, விஷ்வா, ஆதித்யா, சாருமதி, சஹானா, ஆதர்ஷ், மனிஷ் நாராயணா, ஹரிஹரன், தமிழமுதன், நரேன் ஆகியோருக்கு டி.எஸ்.பி., கிரியா சக்தி வாழ்த்து தெரிவித்தார். மாஸ்டர் செந்தில்முருகன் நன்றி கூறினார்.

