/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மின்துறை அலுவலகத்திற்கு டி.டி.,யுடன் வந்த விவசாயிகளால் பரபரப்பு
/
மின்துறை அலுவலகத்திற்கு டி.டி.,யுடன் வந்த விவசாயிகளால் பரபரப்பு
மின்துறை அலுவலகத்திற்கு டி.டி.,யுடன் வந்த விவசாயிகளால் பரபரப்பு
மின்துறை அலுவலகத்திற்கு டி.டி.,யுடன் வந்த விவசாயிகளால் பரபரப்பு
ADDED : டிச 20, 2025 06:45 AM

சிதம்பரம்: தட்கல் முறையில், விவசாய மின் இணைப்பு பெற, பல லட்சம் ரூபாய் டி.டி., யுடன், மின் அலுவலகம் வந்த விவசாயிகளை, திருப்பி அனுப்பியதால், திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம் மின் துறை அலுவலகத்திற்கு, நேற்று சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள, பூலாமேடு, கண்டமங்கலம், திருமுலஸ்தானம், அகரபுத்துார், உடையூர், குறியாமங்கலம், கண்டமங்கலம், அறந்தாங்கி, தவர்தாம்பட்டு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட விவசாயிகள், தட்கல் முறையில், விவசாய மின் இணைப்பு பெற பல லட்சம் ரூபாய் டி.டி.,யுடன் வந்தனர்.
அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளை அணுகி, தட்கல் முறையில் மின் இணைப்பு பெற , டி.டி., கொண்டு வந்துள்ளாக தெரிவித்தபோது, நேற்றே முடிந்துவிட்டது என கூறி திருப்பி அனுப்பியுள்ளனர். மேலும், தட்கல் மின் இணைப்பு பெ ற, அரசு 10 ஆயிரம் விவசாயிகளுக்கு மட்டுமே அனுமதித்துள்ளது.
அதுவும் 18ம் தேதியே முடிவடைந்தது என கூறினர். இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
விவசாயி ஒருவர் கூறுகையில், 'தட்கல் மின் இணைப்பு பெற பல லட்ச ரூபாய் கட்டி டி.டி., எடுத்து வந்தும், மின்வாரிய அதிகாரிகள் சரியான தகவல் தெரிவிக்காமல் வாங்க மறுக்கின்றனர். விவசாயிகளுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாததால் நாங்கள் அலைகழிக்கப்படுகிறோம்,' என்றார்

