/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சம்பா பட்ட நடவுக்கு பொன்மணி விதை நெல் இருப்பு வைத்து வழங்க விவசாயிகள் கோரிக்கை
/
சம்பா பட்ட நடவுக்கு பொன்மணி விதை நெல் இருப்பு வைத்து வழங்க விவசாயிகள் கோரிக்கை
சம்பா பட்ட நடவுக்கு பொன்மணி விதை நெல் இருப்பு வைத்து வழங்க விவசாயிகள் கோரிக்கை
சம்பா பட்ட நடவுக்கு பொன்மணி விதை நெல் இருப்பு வைத்து வழங்க விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஆக 30, 2025 07:40 AM
பெண்ணாடம் : நடப்பு சம்பா நெல் பட்டத்திற்கு நல்லுார், மங்களூர் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் வேளாண்மை விரிவாக்க மையங்களில் பொன்மணி விதை நெல் இருப்பு வைத்து வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நல்லுார், மங்களூர் வட்டாரத்திற்குட்பட்ட பெண்ணாடம், திட்டக்குடி பகுதிகளில் முன்பட்ட சம்பா நடவு பணிக்கு நாற்று தெளிப்பதற்கு வயல்களை உழுது சமன் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக, அந்தந்த பகுதிகளில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்கம் மையம் மற்றும் வேளாண்மை விரிவாக்க மையங்களில் சம்பா பட்டத்திற்கு இடுபொருட்களுடன் பொன்மணி விதை நெல் 30 கிலோ எடை கொண்ட மூட்டை 1,100 ரூபாய்க்கு விதை நெல் வாங்கி விவசாயிகள் நாற்று தெளிப்பது வழக்கம்.
நடப்பு பட்டத்திற்கு 2 வாரங்களுக்கு முன் பெண்ணாடம், நல்லுார், பட்டூர் பகுதிகளில் வேளாண்மை அலுவலகங்களுக்கு ஏ.டி.டி., - 54; ஏ.டி.டி., 51; கோ - 50 மற்றும் பொன்மணி விதை நெல் வந்தது.
அதில், இப்பகுதி விளை நிலங்களுக்கு ஏற்ற பொன்மணி விதை நெல்லை மட்டும் விவசாயிகள் அதிகளவில் வாங்கினர். 10 நாட்களுக்கு முன் பொன்மணி விற்று தீர்ந்தது. விவசாயிகள் மற்ற விதை நெல்லை வாங்க தயக்கம் காட்டுகின்றனர்.
பெண்ணாடம் விவசாயி ஒருவர் கூறுகையில், 'பெண்ணாடம், திட்டக்குடி பகுதியில் உள்ள நிலங்களுக்கு ஐந்தரை முதல் 6 மாத பயிரான பொன்மணி நெல்லை விரிவாக்க மையங்களில் 1,100 கொடுத்து 30 கிலோ எடையுள்ள விதை நெல்லை இடுபொருட்களுடன் வாங்கி விவசாயிகள் நாற்று தெளிப்பார்கள். பொன்மணி நெல் மழைக்காலங்களில் பாதிப்பு அதிகம் ஏற்படாது.
மற்ற நெல் ரகங்கள் மழையில் பாதிக்கும் என்பதால் அதனை விவசாயிகள் வாங்க தயக்கம் காட்டுகின்றனர். தனியார் கடைகளில் விதை நெல் வாங்கினால் 200 ரூபாய் அதிகம் உள்ளது.
இதனால் பொன்மணி விதை நெல்லை விரிவாக்க மையங்களில் இருப்பு வைத்து வழங்கினால் விவசாயிகள் பயன்பெறுவர்' என்றார்.