/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
500 ஆண்டு பழமையான கோவிலில் தென்பட்ட சுரங்க அறையில் ஆய்வு
/
500 ஆண்டு பழமையான கோவிலில் தென்பட்ட சுரங்க அறையில் ஆய்வு
500 ஆண்டு பழமையான கோவிலில் தென்பட்ட சுரங்க அறையில் ஆய்வு
500 ஆண்டு பழமையான கோவிலில் தென்பட்ட சுரங்க அறையில் ஆய்வு
ADDED : அக் 23, 2024 06:13 AM

நடுவீரப்பட்டு : பண்ருட்டி அருகே சி.என்.பாளையம் சொக்கநாதர் கோவிலில் கண்டுபிடிக்கப்பட்டசுரங்க அறையை தொல்லியல் துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
கடலுார் மாவட்டம், நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையத்தில், சொக்கநாதர் கோவில் உள்ளது. 500 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில், தற்போது கும்பாபிஷேக திருப்பணி நடக்கிறது.
இப்பணியின்போது, சுப்பிரமணியர் சன்னிதியில் உள்ள அர்த்தமண்டபத்தில், தரைக்கு கருங்கற்கள் பதிக்கும் பணி கடந்த 20ம் தேதி துவங்கியது. இதற்கு பள்ளம் தோண்டிய போது, சுரங்க அறை காணப்பட்டது.
இதுகுறித்து, அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் கோவிலில் இருந்த சுரங்க அறைக்குள், அதிக வெளிச்சம் ஏற்படுத்தும் விளக்குகளை விட்டும், மொபைல் போன் கேமராவை, 'ஆன்' செய்தும், விட்டுப் பார்த்து ஆய்வு செய்தனர்.
அந்த ஆய்வில், சுரங்க அறை, 5 அடி உயரம், 11 அடி நீளம், 6 அடி அகலம் உள்ளதாக இருந்தது.
அறை முழுதும் களிமண்ணால் கட்டப்பட்டு இருந்தது. எந்த பொருளும் அங்கு இல்லை. அதைத் தொடர்ந்து, சுரங்க அறையை மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் 'கடந்த காலங்களில், சாமி சிலைகளை பாதுகாக்க இதுபோன்ற அறைகள் அமைக்கப்படுவது வழக்கம். பல கோவில்களில் ரகசிய அறைகள் இருக்கின்றன.
அதுபோல், இக்கோவிலிலும் சிலைகள் பாதுகாப்புக்காக இந்த அறை அமைக்கப்பட்டிருக்கலாம்' என்றனர்.

