ADDED : மார் 01, 2024 12:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார், மஞ்சக்குப்பத்தில் தி.மு.க., அரசின் சாதனைகளை விளக்கி டாக்டர் கலைக்கோவன் திண்ணை பிரசாரம் செய்தார்.
'இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் கடலுார் மாநகராட்சி 10வது வார்டு மஞ்சக்குப்பம் மார்க்கெட் பகுதியில் வீடுகள், கடைகள் தோறும் சென்று டாக்டர் கலைக்கோவன் திண்ணை பிரசாரம் செய்தார்.
அப்போது, பொதுமக்கள், வியாபாரிகளிடம் தி.மு.க., அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார். அவைத் தலைவர் பழனிவேல், கவுன்சிலர் ராஜாமோகன், வார்டு செயலாளர் குமார் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

