ADDED : மார் 14, 2024 05:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம், : பெண்ணாடம் அடுத்த கொத்தட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 60ம் ஆண்டு வைர விழா நடந்தது.
விழாவிற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட தொடக்கல்வி அலுவலர் ஜெயச்சந்திரன், டி.எஸ்.பி., மோகன், ஊராட்சி தலைவர் அன்னபூரணி முன்னிலை வகித்தனர். ஆசிரியர் செல்வன் வரவேற்றார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஜோதி, ஆசிரியர்கள் நீதிமோகன், ஆனந்தராஜ், லட்சுமி, பவுஜியா பேகம், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.
இதில், பள்ளியில் முன்னதாக நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி, சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பட்டதாரி ஆசிரியர் குமார் நன்றி கூறினார்.

