நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : மங்கலம்பேட்டை தேரடியில் வி.சி., கட்சி, இந்திய குடியரசு கட்சி உள்ளிட்ட தலித் இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வி.சி., நகர செயலாளர் அம்பேத்கர் தலைமை தாங்கினார். குடியரசு கட்சி நகர செயலாளர் ராமானுஜம் முன்னிலை வகித்தார்.
இந்திய குடியரசு கட்சி மாநில பொதுச் செயலாளர் மங்காபிள்ளை, வி.சி., கட்சி மாவட்ட செயலாளர் நீதிவள்ளல், ஒன்றிய செயலாளர் சுப்புஜோதி, கொள்கை பரப்பு செயலா ளர் ராமையன் கண்டன உரையாற்றினர்.
துாத்துக்குடி கவின் ஆணவப்படுகொலையை கண்டித்தும், இதுபோன்ற சம்பவங்களை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என, கோஷங்கள் எழுப்பினர்.

